ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

புழுவெட்டு மறைய

     நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற

       அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

வழுக்கையில் முடி வளர

             கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய்   எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்

ஞாயிறு, ஜூலை 22, 2012

புற்று நோய்

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன்        500  கிராம்
whisky(or)brandy              50  மில்லி
 
தயாரிப்பு முறை
சோற்று கற்றாழை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்

தோலை நீக்கிவிடக்கூடாது

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து  மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. 
     இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

      இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

சனி, மார்ச் 03, 2012

ஞாபக சக்தி அதிகரிக்க

பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.

தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்து கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

புதன், டிசம்பர் 28, 2011

ஜலதோஷம்,மூக்கடைப்பு

உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலை ச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும்.

சனி, நவம்பர் 26, 2011

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக

கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் .